Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேநீர், கொத்து, ப்ரைன் ரைஸின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் தேநீர், கொத்து, ப்ரைன் ரைஸின் விலைகள் அதிகரிப்பு

5 ஐப்பசி 2023 வியாழன் 14:31 | பார்வைகள் : 6666


சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் தேநீர், கொத்து,  Fried rice என்பனவற்றின் விலைகளையும் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நேநீரின் விலையை 10 ரூபாவினாலும் கொத்து ஒன்றை 20 ரூபாவினாலும் Fried rice விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமிடத்து, உணவுப்பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்