ஓட்ஸ் தோசை
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9678
காலை வேளையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், அந்நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். அதிலும் அது ஓட்ஸ் ஆக இருந்தால் இன்னும் நல்லது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஒட்ஸ் கொண்டு செய்யக்கூடிய ஒரு அருமையான காலை உணவை உங்களுக்காக கொடுத்துள்ளது. அது தான் ஓட்ஸ் தோசை.
சரி, இப்போது அந்த ஓட்ஸ் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
ஓட்ஸ் தோசை
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ரவை - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ஒட்ஸ், அரிசி மாவு, ரவை, தயிர், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை எண்ணெய் ஊற்றி தோசையாக ஊற்றி எடுத்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை ரெடி!!!