விஜய்யின் அடுத்த சர்ச்சை-லியோ டிரைலரில் கெட்டவார்த்தை

5 ஐப்பசி 2023 வியாழன் 14:37 | பார்வைகள் : 9207
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக் ஷன் படம் ‛லியோ'. அக்., 19ல் படம் வெளியாக உள்ளது. இன்று(அக்.,5) மாலை 6:30 மணியளவில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். முழுக்க முழுக்க ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 5 நிமிடத்திலேயே படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது.
அதேசமயம் டிரைலரில் 1:47 நிமிடத்தில் விஜய் ஒரு வசனத்தின் போது ஒரு கெட்ட வார்த்தை பேசி உள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றது, நா ரெடி பாடலில் புகைபிடித்தல், குடி போன்ற விஷயங்கள் சர்ச்சையாகின. இப்போது இந்த கெட்டவார்த்தை மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் மட்டுமல்லாது சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் இதுபோன்று போகிற போக்கில் கெட்டவார்த்தை இடம் பெறுவது அதிகமாகி வருகிறது. இதற்கு முன் இதே லோகேஷின் விக்ரம் படத்திலும் கமல் கெட்டவார்த்தை பேசி இருப்பார். அதேப்போல் அஜித்தின் படங்களிலும் இதுபோன்று கெட்டவார்த்தை இடம் பெற்று இருந்தது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025