Paristamil Navigation Paristamil advert login

"தீர்வுகள் இல்லாமல் Restos du coeur அரசு விட்டுவிடாது", Olivier Véran.

5 ஐப்பசி 2023 வியாழன் 14:58 | பார்வைகள் : 5099


Restos du coeur என்னும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் 1985ம் ஆண்டுமுதல் பிரான்சில் இயங்கி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு இலவசமாக உணவுகள், உணவுப் பொருட்களை வழங்கிவருகிறது.

கடந்த சில காலமாக பிரான்சில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் Restos du coeur மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றையதினம் Reste de coeur நிறுவனத்தின் பொது பிரதிநிதி Jean-Yves Troy,சட்டமன்றத்தின் நிதிக் குழுவின் முன் பின்வருமாறு தெரிவித்தார்.

"எங்களின் வரலாற்றில் முதல் தடவையாக எங்களின் உதவிகளை மட்டுப்படுத்தவுள்ளோம், பலரை கைவிடவுள்ளோம், இன்று Reste de coeur 170 மில்லியன் உணவு உதவிகளை 1.3 மில்லியன் மக்களுக்கு வழங்குகிறோம் வரும் நவம்பர் மாதத்தில், இதனை நாங்கள் தொடர முடியாதுள்ளது" என தெரிவித்திருந்தார்.

இந்த விடையம் நேற்றையதினம் ஊடகங்களில் பரவலாகப் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை LCI தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய அரசின் ஊடகப் பேச்சாளர் Olivier Véran " அரசாங்கம் ஒரு நல்ல தீர்வு இல்லாமல் Restos du coeur சேவைகளைக் கைவிடாது, சமூக ஒற்றுமைக்கான அமைச்சர் Aurore Bergé தொடர்ந்து குறித்த விடையம் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் உள்ளார், Restos du coeur தொடர்ந்தும் சேவைகள் செய்யும், வறிய மக்களை தொடர்ந்தும் அரவணைக்கும் " என தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்