Niger : பிரெஞ்சு இராணுவத்தினரின் வெளியேற்றம் ஆரம்பம்!
5 ஐப்பசி 2023 வியாழன் 15:29 | பார்வைகள் : 4500
Niger நாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸ்-நைகர் நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த வெளியேற்றம் இடம்பெறுகிறது.
பிரெஞ்சு இராணுவ அமைச்சகம் இதனை இன்று ஒக்டோபர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவித்துள்ளது. Niger இல் உள்ள அனைத்து பிரெஞ்சு இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறுவார்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதையடுத்து, இன்று முதல் அந்த வெளியேற்றம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Niger இல் மொத்தமாக 1,500 பிரெஞ்சு இராணுவத்தினர் உள்ளனர். பகுதி பகுதியாக அவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.
பிரான்சின் முன்னாள் காலனி நாடாக இருந்த Niger இல் அண்மையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து அங்கு ‘பிரெஞ்சு எதிர்ப்பு’ வலுத்துள்ளது. பிரெஞ்சு தூதரகத்தினர் சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி பிரான்சை வந்தடைந்தனர்.
இந்நிலையில், பிரெஞ்சு இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறத்தொடங்கியுள்ளனர்.