Paristamil Navigation Paristamil advert login

பரிசில் Homophobic தாக்குதல்கள் அதிகரிப்பு!

பரிசில் Homophobic தாக்குதல்கள் அதிகரிப்பு!

5 ஐப்பசி 2023 வியாழன் 17:15 | பார்வைகள் : 6845


கடந்த ஆண்டுகளை விட இவ்வருடத்தில் Homophobic என அழைக்கப்படும் பால்புதுமையினர் (LGBT+) மீது நடாத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

தலைநகர் பரிசில் இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 419 தாக்குதல்கள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இவற்றில் 72 தாக்குதல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 56 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சென்ற 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 400 தாக்குதல்கள் பரிசில் இடம்பெற்றிருந்த நிலையில், இவ்வருடத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

 வீதிகளில் வைத்தும், பொது போக்குவரத்துக்களில் வைத்தும் ஏனைய பல பொது இடங்களிலும் வைத்து இந்த பல்புதுமையினர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது அவர்கள் மீதான தாக்குதல்கள் 129% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்