Paristamil Navigation Paristamil advert login

ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சியா தி.மு.க.,?

ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சியா தி.மு.க.,?

9 ஐப்பசி 2023 திங்கள் 15:49 | பார்வைகள் : 3156


உங்கள் துறையை தவிர, வேறு எதையும் பேசி வம்புல மாட்டிக்காதீங்க என, அனைத்து அமைச்சர்களிடமும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கூறியுள்ளார்.

ஐயா... இதைத்தானே நீங்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, யாரும் உங்கள் பேச்சை கேட்பதாக தெரியவில்லையே...

அமைச்சர்கள் அவரவர் பாட்டுக்கு பேசியபடி தான் இருக்கின்றனர். நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி, 'அட்வைஸ்' கொடுப்பது தான் பரிதாபமாக உள்ளது.

உங்கள் தந்தை கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியல் செய்யும் சீனியர்கள் பலர், உங்களை மதிக்காமல் இஷ்டம் போல பேசி, கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்டப் பெயர் சம்பாதித்து தருகின்றனர். அதுவும் இல்லாமல், 'உதயநிதியின் சனாதன சர்ச்சை பேச்சு, தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை நாடு முழுதும் ஏற்படுத்தியுள்ளது' என்றும் கூறி வருந்தியுள்ளீர்கள்.

மாண்புமிகு முதல்வர் அவர்களே... உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று... மற்ற மத பண்டிகைகளுக்கு வரிந்துகட்டி வாழ்த்து கூறும் நீங்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதை தவிர்ப்பது, ஹிந்து துவேஷம் இல்லையா?

கேரளாவில் மட்டும் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நீங்கள், நாடு முழுக்க ஹிந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லையே... இவை ஹிந்துக்களுக்கு ஆதரவான செயல்கள் என்று கருதுகிறீர்களா? எது எப்படியோ... 'அறிவுரை சொல்வது உங்கள் கடமை; அதை கேட்டு, பின்பற்றாமல் இருப்பது உங்கள் கட்சியினர் உரிமை' என்ற கதையாகவே இருக்கிறது இதெல்லாம்!

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்