கொழும்பில் பயணிகள் பேருந்தில் விழுந்த மரம் - 5 பேர் பலி - பலர் காயம்
6 ஐப்பசி 2023 வெள்ளி 06:34 | பார்வைகள் : 8960
கொகொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேரூந்து மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக பேரூந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
https://web.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=341933121693731


























Bons Plans
Annuaire
Scan