Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு விதிவிலக்கு தண்டனை தேவையில்லை! - கருத்துக்கணிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு விதிவிலக்கு தண்டனை தேவையில்லை! - கருத்துக்கணிப்பு

6 ஐப்பசி 2023 வெள்ளி 06:00 | பார்வைகள் : 4291


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிறுவர்கள் மீது விதிவிலக்கு தண்டனை தேவையில்லை என அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருதுகின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை பிரான்சில் தீரா தலைவலியாக உள்ளது. சமீபத்தில் சிறுவர்களை அதில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துள்ளது. 17 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அதில் ஈடுபடுத்தினால் குறைந்த அளவு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு சிறுவர்கள் அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிறுவர்கள் மீது ‘அவர்கள் சிறுவர்கள்’ எனும் இரக்கம் காட்டத்தேவையில்லை என 62% சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் பெண்கள் 68% சதவீதமும், 32% சதவீதமானவர்கள் ஆண்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரே அளவில் தண்டனை வழங்கப்படவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பை l'institut CSA எனும் நிறுவனம் இணையம் வழியாக ஒக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,013 பேரிடம் மேற்கொண்டிருந்தது. 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்