Paristamil Navigation Paristamil advert login

Mayotte தீவில் குடிநீர் தட்டுப்பாடு - தண்ணீர்போத்தல்களை விநியோகிக்கும் அரசு!

Mayotte தீவில் குடிநீர் தட்டுப்பாடு - தண்ணீர்போத்தல்களை விநியோகிக்கும் அரசு!

6 ஐப்பசி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3734


பிரான்சில் கடல்கடந்த நிர்வாக மாவட்டனமான Mayotte இல் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பட்டை அடுத்து, அரசு தண்ணீர்போத்தல்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

என்றும் இல்லாதவாறு இம்முறை அங்கு குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மிக குறைந்த அளவு தண்ணீர் மாத்திரமே குழாய் வழியாக விநியோகிக்கப்படுகிறது. அதையடுத்து அரசு நாள் ஒன்றுக்கு 110,000 இல் இருந்து 120,000 வரையான குடிநீர் போத்தல்களை விநியோகித்து வருகிறது. 

வயதானவர்கள், மருத்துவ உதவியுடன் வாழ்பவர்கள், சிறுவர்கள் போன்றோருக்கான தண்ணீர் தேவைகளை நிர்வர்த்தி செய்து வருகின்றனர். இதனை பிரான்சில் கடல்கடந்த நிர்வாகப்பிரிவுக்கான அமைச்சர் (ministre délégué chargé des Outre-mer) Philippe Vigier அறிவித்துள்ளார்.

குறித்த Mayotte தீவுக்கு நாள் ஒன்றுக்கு 45,000 கன மீற்றர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது அங்கு 30,000 கன அளவு தண்ணீர் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியவாறு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்