இரஷ்யாவின் தாக்குதலில் 51 பேர் பலி - பிரான்ஸ் கண்டனம்!

6 ஐப்பசி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 7963
உக்ரேனின் கிழக்கு நகரமான Groza மீது இரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 5, நேற்று வியாழக்கிழமை காலை இத்தாக்குதலை இரஷ்யா மேற்கொண்டது. உக்ரேனிய இராணுவ வீரர் ஒருவரின் இறுதிச் சடங்கு Groza நகரில் இடம்பெற்ற நிலையில், அங்கு ஏவுகணை மூலம் இரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்ளிட்ட 51 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர்.
இந்த மனிதப்படுகொலைக்கு உலக நாடுகள் உடனடி கண்டனம் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில், 'உள்நோக்கத்தோடு பொதுமக்கள் மீது இரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. இரஷ்யா வரலாற்றுத் தவறை மேற்கொள்கிறது!' என குறிப்பிடப்பட்டுள்ளது.