வயோதிக சாரதிகளுக்கு சிறப்பு மருத்துவ அறிக்கை? - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்!
6 ஐப்பசி 2023 வெள்ளி 08:51 | பார்வைகள் : 4702
வயோதிக சாரதிகள் மகிழுந்துகள் செலுத்த சிறப்பு மருத்துவச் சான்றிதழ் தேவை என பரவிவரும் வதந்திகளுக்கு போக்குவரத்து அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“இந்த வதந்திகளுக்கும் பொய்யான செய்திகளுக்கும் நான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்!” என அமைச்சர் Clément Beaune தெரிவித்தார். “70 வயதுக்கு மேற்பட்ட வயோதி சாரதிகளுக்கு என சிறப்பு மருத்துவச் சான்றிதழ் கோரப்படுவதை நான் ஆதரிக்கவில்லை. சாரதி அனுமதி பத்திரத்தில் காவதி திகதி உள்ளது. அதுவே போதுமானது. “ என அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்சில் முதியோர்களால் ஏற்படும் வீதி விபத்து அதிகரித்துள்ளது. வீதிகளில் எதிர் திசையில் பயணிப்பது, கட்டுப்பாடு இல்லாமல் விபத்தை ஏற்படுத்துவது, பாதசாரிகளின் பாதைக்குள் மகிழுந்தைச் செலுத்துவது போன்ற அசம்பாவிதங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த சிறப்பு மருத்துவச் சான்றிதழ் கோரப்பட உள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைக் கருத்துக்களுக்கே அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.