பிரான்சில் கழிவுநீரில் COVID-19 உட்பட பல தொற்று நோய்கள்? பொது சுகாதார அமைப்பு.
6 ஐப்பசி 2023 வெள்ளி 08:55 | பார்வைகள் : 4020
குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில் மனிதர்களுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படுவது வழமையான ஒன்று. இதனால் அரசு தொற்று நோய்கள் ஏற்படாது இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு 'SUM'Eau' என்னும் ஒரு புதிய அமைப்பை நிறுவியுள்ளது. குறித்த அமைப்பு Corse தவிர நாட்டில் உள்ள பிராந்தியங்ளிலும் ஒவ்வொரு 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருக்கும் கழிவுநீரை பரிசோதித்து, அதில் தொற்று நோய் அறிகுறிகள் இருக்கிறதா? என ஆராய்ந்து தன் முடிவுகளை, பிரான்ஸ் பொது சுகாதார அமைப்புக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பின் தலைவர் Caroline Semaille " இந்த முடிவுகள் COVID-19 உட்பட பல தொற்று நோய்க் கிருமிகளின் உருமாற்றம், அவற்றின் பரிணாமம், போன்ற அளவை மதிப்பிட உதவுவதுடன், இதனால் பொது சுகாதார அமைப்பு எந்தெந்த பகுதிகளில் அதிகமாக நோய் தாக்கம் இருக்கும் என்பதையும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கும் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.