Paristamil Navigation Paristamil advert login

பாஜ., கூட்டணி முறிவு இறுதியானது : பழனிசாமி

பாஜ., கூட்டணி முறிவு இறுதியானது : பழனிசாமி

4 ஐப்பசி 2023 புதன் 07:32 | பார்வைகள் : 2830


பாஜ., கூட்டணியிலிருந்து விலகல் முடிவில் மாற்றமில்லை. பார்லி., லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ., உடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். பாஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது, 2 கோடி தொண்டர்களின் உணர்வின் முடிவாகும். பா.ஜ., மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவிப்பது அவரது சொந்த கருத்தாகும். அதிமுக கட்சியில் புதிய கூட்டணி கட்சிகள் இணைவதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

பாஜ., கூட்டணியிலிருந்து விலகல் முடிவில் மாற்றமில்லை. அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. பார்லி., லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. 

சந்திப்பு எதற்கு?

மத்திய அமைச்சர்களை திமுக அமைச்சர்களும் அவ்வபோது சந்தித்து வருகின்றனர். அவர்களை கூட்டணி என்று கூற முடியுமா?. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துள்ளனர். தங்களின் கடமையை அவர்கள் செய்துள்ளனர்.  

ஸ்டாலினை சாடிய பழனிசாமி

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கணிக்காமல் முன்கூட்டியே முதல்வர் ஸ்டாலின் திறந்து விட்டார். முதல்வரின் தவறான நடவடிக்கையால் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பில் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிவிட்டது. 

இண்டியா கூட்டணியில் இருக்கின்றனர். ஆனால் கர்நாடக முதல்வரை சந்தித்து பேசுவதில்லை. திமுக அரசு ஆட்சி அதிகாரத்தை மட்டுமே பார்க்கிறது. தமிழக விவசாயிகள் நலனை பற்றி கண்டுகொள்வதில்லை.

மத்தியில் ஆட்சி அதிகாரம் வேண்டும். தாம் கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க திமுக அரசு செயல்படுகிறது. காவிரியில் தண்ணீர் இன்றி சாகுபடி செய்த பயிர்கள் கருகுவதால் டெல்டா விவசாயிகளின் வடிக்கும் கண்ணீரை திமுக அரசு கண்டுகொள்வதில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்