Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு காரணம் என்ன?

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு காரணம் என்ன?

4 ஐப்பசி 2023 புதன் 12:38 | பார்வைகள் : 3788


கர்நாடகாவில் ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்திருப்பதற்கு 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசை எதிர்க்கத்தான் என்றாலும் மேலும் பல காரணங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைக்கும் முடிவு, நான்கு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.
எதிர்ப்பு ஓட்டுகள்

கடந்த லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 25ல் வெற்றி பெற்று பா.ஜ., சாதனை படைத்தது. அடுத்து நடந்த சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, பா.ஜ., மறுபரிசீலனை செய்யும் யோசனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால், காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுகளைத் திரட்ட முடிவு செய்துள்ளது.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பா.ஜ.,வுடனான தன் கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது. எனவே, இங்கு தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள, ம.ஜ.த.,வுடன் கூட்டணியை கட்டாயமாக, மேலிடம் கருதுகிறது.

நேரடி போட்டி

மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பா.ஜ., அதற்கு தானே தலைமை என்ற நோக்கில் செயல்படும். இதன் மூலம், கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ., தீவிரமாக போராடும். இதற்கு ஒரே தீர்வு ம.ஜ.த.,வுடன் கூட்டணி. கூட்டணி அமைக்கும் கட்சியுடன் நீண்ட காலம் இருந்து, அக்கட்சி ஓட்டுகளை தன்பக்கம் ஈர்க்கும். இதன் மூலம், காங்கிரசுக்கு எதிராக பா.ஜ., மட்டும் தான் நேரடி போட்டி என்ற பிம்பம் உருவாக்கும்.

லிங்காயத் சமூகம்

கர்நாடகாவில் மாற்றுக் கட்சியுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து, எப்படி தனது பலத்தை அதிகரித்தது தெரிய வரும். கடந்த 1998 ல் லோக்சக்தி கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டேவுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது. இதற்கு முக்கிய காரணம், அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஜனதா தளத்தின் ஓட்டுகளை பெறவே. கர்நாடகாவின் வட பகுதியில் இச்சமுதாய ஓட்டுகள் அதிகளவில் உள்ளன.

இதன் வாயிலாக, லிங்காயத் ஓட்டுகள் அப்படியே லோக்சக்தி, பா.ஜ.,வுக்கு கிடைத்தன. இதன் பலனாக அப்போதைய லோக்சபா தேர்தலில் லோக் சக்தி கட்சி 16 இடங்களிலும், பா.ஜ., 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின், மீண்டும் 1999 ல் நடந்த லோக்சபா தேர்தலில், மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மறுத்து லோக்சக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளத்துடன் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பா.ஜ., ஏழு இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.

ஆனாலும், 2004 ல் நடந்த லோக்சபா தேர்தலில் லிங்காயத் சமூகத்தினரின் ஓட்டுகளால், பா.ஜ., 18 இடங்களில் வெற்றி பெற்றது. அதுபோன்று, ம.ஜ.த.,வின் கோட்டையான பழைய மைசூரு பகுதியில், ஒக்கலிகர் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறவே, ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் காங்கிரசுடன் நேரடி போட்டி வரும் போது, ஒக்கலிகர் சமூகத்தினரின் ஓட்டுகளை ம.ஜ.த.,விடம் இருந்து பெற்று விடலாம் என பா.ஜ., நினைக்கிறது.

எடியூரப்பா அதிருப்தி

கர்நாடகாவில் கூட்டணியை நோக்கி பா.ஜ., நகர்வது, அக்கட்சியின் மேலிட தலைவர்களின் அவநம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது எடியூரப்பாவுக்கும் கூட, கூட்டணி அமைத்ததில் அதிருப்தி இருப்பதாக தெரிகிறது. மாநில புதிய தலைவர், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருப்பது, மாநில தலைவர்கள் மீது மத்திய அமைச்சர்கள் அதிருப்தி இருப்பது காட்டுகிறது.

ம.ஜ.த.,வும் தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள, இந்த கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த 1996க்கு பின், லோக்சபா தேர்தலில் அவ்வளவாக ம.ஜ.த., ஆர்வம் காட்டவில்லை. 2019 ல் காங்கிரசுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்த போதும், வேட்பாளர்கள் கிடைக்காமல், ம.ஜ.த.,வுக்கு சிரமம் ஏற்பட்டது.

ம.ஜ.த., கவனம்

ம.ஜ.த., இரு விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். முதலில் ஓட்டு பரிமாற்றம் தொடர்பான பிரச்னை. தலைவர்கள் மட்டத்தில் கூட்டணியாக இருந்தாலும், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மட்டத்தில் கருத்து பேதங்கள் எழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கடந்த 1999ல் ஐ.ஜ.த.,வின் 50 சதவீத ஓட்டுகள் பா.ஜ.,வுக்கும், மீதமுள்ள ஓட்டுகள் காங்கிரசுக்கும் சென்றன. இதற்கு முக்கிய காரணம், பா.ஜ., தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சியாகும். ஐ.ஜ.த., போட்டியிட்ட தொகுதிகளில், அக்கட்சிக்கு ஓட்டுகள் குறைய, பா.ஜ., செயல்பாட்டாளர்களின் பணியே காரணம். இதே நிலை ம.ஜ.த., வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததுடன், தனது பழைய மைசூரு பகுதியை ம.ஜ.த., தக்க வைத்து கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், இந்த கூட்டணியால் பா.ஜ.,வுக்கு தான் அதிக லாபம்.

 

எதிர்ப்பு ஓட்டுகள் கடந்த லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 25ல...

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3448437
எதிர்ப்பு ஓட்டுகள் கடந்த லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 25ல...

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3448437

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்