Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியா செல்ல காத்திருப்பவர்களுக்கு விஷேட தகவல்..

பிரித்தானியா செல்ல காத்திருப்பவர்களுக்கு விஷேட தகவல்..

4 ஐப்பசி 2023 புதன் 08:38 | பார்வைகள் : 4513


பிரித்தானிய விசா கட்டண உயர்வானது அக்டோபர் 4ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் 6 மாதங்களுக்கு உட்பட்ட பார்வையாளர்கள் விசாவுக்கு 15 பவுண்டுகள் அதிகரிக்கப்படவுள்ளது.

 மாணவர்களுக்கான விசா கட்டணம் 127 பவுண்டுகள் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய உள்விவகார அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்,

 6 மாதங்களுக்கு உட்பட்ட பார்வையாளர்கள் விசாவுக்கான கட்டணம் 115 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,

 வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணமானது 490 பவுண்டுகள் என முடிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கான விசா மட்டுமின்றி, அனைத்து வகையான விசா கட்டணங்களும் உயர்ந்துள்ளது. 

2, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கான பார்வையாளர்கள் விசா கட்டணமும் அதிகரித்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான விசா கட்டணங்களும் அதிகரித்துள்ளது.

 உத்தியோகப்பூர்வ தரவுகளின்படி, குடும்பம், குடியுரிமை விசாக்களின் கட்டணமும் 20% வரை அதிகரிக்கும் என்றே தெரியவந்துள்ளது.

மாணவர்களில் சிறார்கள் உட்பட, அவர்களை சார்ந்தவர்களுக்குமான விசா கட்டணமும் 490 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. 

ஆனால் 6 மாதங்களுக்குள் 11 மாதங்களுக்கு  கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கான விசா கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பொறுத்தமட்டில், ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படுமாயின் அவர்களுக்கான விசா கட்டணம் 719 பவுண்டுகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது,

ஆனால், ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்பட்டால், அவர்களுக்கான குடிவரவு கட்டணம் 1420 பவுண்டுகள் என கூறுகின்றனர்.

மேலும் குறுகிய காலத்திற்கு என திறன்வாய்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த, அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படுகிறது என்றால் அவர்களுக்கான விசா கட்டணம் 551 பவுண்டுகள் என கூறப்படுகிறது.

ஆனால் ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகுமாயின், விசா கட்டணம் 1,084 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.

இந்த விசா கட்டணமானது அக்டோபர் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்