கேரட் அல்வா
4 ஐப்பசி 2023 புதன் 08:50 | பார்வைகள் : 2850
கேரட் அல்வா சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இனிப்பு வகை, இதனை எல்லா விசேஷங்களுக்கும் செய்யலாம் சுலபமான முறையில் சுவையான கேரட் அல்வா செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
கேரட் – 1.2 கிலோ (1200g)
சர்க்கரை – 1 கப் – 200g
பால் – 2 கப் – 500ml
நெய் – ¼ கப் + 2 மேஜை கரண்டி
பால் பவுடர் – ¼ கப்
ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி – தேவையான அளவு
செய்முறை
1200g கேரட்டை தோல் நீக்கி காம்புகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதனை கேரட் துருவும் கட்டையில் துருவிக் கொள்ளலாம் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பிரஷர் குக்கரில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கொள்ளவும்.
நெய் சூடானதும் துருவிய கேரட் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர் 2 கப் பால் சேர்த்துக் கொள்ளவும், நன்றாக கிளறவும்.
பிரஷர் குக்கரை மூடி வைத்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.
பிரஷர் ரிலீசானதும், மீண்டும் அடுப்பை பற்ற வைத்து, அதில் 200g சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை சேர்த்ததும் இளகி வரும் அதனை கெட்டியாகும் வரை கிளறவும்.
கெட்டியானதும் அதில் ¼ கப் பால் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் ¼ கப் நெய், ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
2 நிமிடங்களுக்கு நன்றாக கலந்த பின்னர், பொடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி, சேர்த்துக் கொள்ளவும். .சுவையான கேரட் அல்வா தயார்.