Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு

இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு

4 ஐப்பசி 2023 புதன் 10:30 | பார்வைகள் : 2116


லிட்ரோ எரிவாயு விலை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 3,470 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் விலை 137 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,393 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையினை கருத்தில் கொண்டு விலை சூத்திரத்திற்கு அமைய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்