பரிசில் - ஒலிம்பிக் போட்டிகளின் போது மகிழுந்துகளுக்கு தடை?
4 ஐப்பசி 2023 புதன் 11:41 | பார்வைகள் : 4284
2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது, பரிசில் மகிழுந்துகளுக்கு முற்றாக தடை விதிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை பரிஸ் நகர முதல்வரிடம் முன் வைத்தனர். ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் ஆறு வார காலமும் பரிசுக்குள் மகிழுந்துகளில் பயணிப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இந்த கோரிக்கையை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ நிராகரித்தார். ‘பல விதமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் அனைவருக்கும் சமமற்ற முறையில் தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது!” என ஆன் இதால்கோ தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளின் போது கொண்டுவரப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.