இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம் - ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை

4 ஐப்பசி 2023 புதன் 14:37 | பார்வைகள் : 5639
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.
அவர் 2:03.20 நிமிடங்ளில் பந்தைய தூரத்தை ஓடி முடித்துள்ளார். இப்போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றன.
2002ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் இலங்சை சார்பில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்னேவும் கலந்து கொண்டு கடைசி இடத்தைப் பெற்றார்.
அவர் 2:05.87 நிமிடங்களில் பந்தைய தூரத்தை ஓடி முடித்துள்ளார்.
இந்த தங்கப் பதக்கத்தின் மூலம் இலங்கை பதக்கப் பட்டியலில் 22வது இடத்துக்கு முன்னேறியது.
இலங்கை இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளது.