பரிசில் இருந்து Toulon நகருக்கு குறைந்த விலை தொடருந்து சேவை!

4 ஐப்பசி 2023 புதன் 16:35 | பார்வைகள் : 11363
பரிசில் இருந்து Toulon நகருக்கு குறைந்த விலை தொடருந்து சேவையான Ouigo ஆரம்பிக்கப்பட உள்ளது. இதுவரை பரிசில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணித்த இந்த Ouigo சேவை முதன்முறையாக பிரான்சின் தெற்கு நகரான Toulon இற்கு இயக்கப்பட உள்ளது.
இவ்வருடத்தின் டிசம்பர் 10 ஆம் திகதி முதலாவது தொடருந்து இயக்கப்பட உள்ளது. பின்னர் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் நாள் ஒன்றுக்கு ஒரு சேவை வீதம் தினம்தோறும் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டண விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அது தொடர்பான விரிவான தகவல்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.