Paristamil Navigation Paristamil advert login

மூட்டைப்பூச்சி விவகாரத்தை நக்கலடித்த அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம்!

மூட்டைப்பூச்சி விவகாரத்தை நக்கலடித்த அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம்!

4 ஐப்பசி 2023 புதன் 16:51 | பார்வைகள் : 11529


பரிசில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள மூட்டைப்பூச்சி விவகாரம் தொடர்பாக, பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் Jimmy Fallon நக்கலடித்துள்ளார்.

The Tonight Show எனும் நிகழ்ச்சியில் தோன்றிய அவர், ஒரு கையில் பிரெஞ்சுப் பாண் (baguette) மற்றைய கையில் வைன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மூட்டைப்பூச்சி தொடர்பான பாடல் ஒன்றை அவர் பாடுகிறார். பாடலில் பரிசில் மூட்டைப்பூச்சி கடி உள்தையும், உங்களையும் அது கடிக்கும் எனவும், நீங்கள் அங்கிருந்தால் அவதானமாக இருக்கவும் எனவும், நான் Airbnb (வீடுகளை வாடகைக்கு விடும் நிறுவனம்) வீடுகளை வாடகைக்கு எடுக்கமாட்டேன் எனவும் அதில் குறிப்பிடுகிறார். 

அவரது இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

Jimmy Fallon முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மக்ரோனை நக்கலடித்து நிகழ்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்