குடும்ப வன்முறை: பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் நேரடியாக புகார் அளிக்க முடியும். நீதி அமைச்சு.
4 ஐப்பசி 2023 புதன் 18:55 | பார்வைகள் : 4931
பிரான்சில் கடந்த காலங்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்கு நிலமைகள் அபாயகரமாக உள்ளது. இதற்கான பல பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் Ile-de-France பொது மருத்துவமனைகளை நிர்வகிக்கும் AP-HP. இயக்குநரான Nicolas Revel, பாரிஸ் காவல்துறை தலைமையக தலைமை அதிகாரி Laurent Nuñez, இவர்களுடன் பாரீஸ் நகர அரச வழக்கறிஞர்கள் Laure Beccuau, Pascal Prache, Nanterre அரச வழக்கறிஞர் Eric Mathais மற்றும் Bobigny, Créteil அரச வழக்கறிஞர்கள் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரி கையொப்பம் இட்டுள்ள அறிக்கை ஒன்று இன்று Ile-de-France சில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில், மருத்துவ மனைக்கு வரும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட நபர் விரும்பும் பட்சத்தில் மருத்துவ மனையில் உள்ள மருத்துவரிடம் புகாரைப் பதிவுசெய்ய முடியும். மருத்துவர் காவல்துறையினரை பிரத்தியோக தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு வழக்கைப் பதிவு செய்வார், காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக மருத்துவ மனைக்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொள்வார்கள். அவர்களின் வழக்கு பாதுகாக்கப்படும் எனவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ மனையில் புகாரை பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் மருத்துவர் அருகில் உள்ள காவல்துறை நிலையத்தில் புகரை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் தற்போது Ile-de-Franceல் உள்ள பின்வரும் மருத்துவ மனைகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. Hôtel-Dieu (Paris 4), Lariboisière (Paris 10), Saint-Louis (Paris 11), Saint-Antoine (Paris 12), Pitié-Salpêtrière (Paris 13), Cochin – Port-Royal (Paris 14), Européen Georges-Pompidou (Paris 15), Bichat-Claude Bernard (Paris 18), Tenon (Paris 20), Ambroise-Paré (Boulogne-Billancourt), Antoine-Béclère (Clamart), Beaujon (Clichy), Louis Mourier (Colombes), Avicenne (Bobigny), Jean-Verdier (Bondy), Bicêtre (Kremlin-Bicêtre), Henri-Mondor (Créteil), Necker-Enfants malades (Paris 15), Armand-Trousseau (Paris 12), மற்றும் Robert-Debré (Paris 19).
இந்த வசதிகள் வரும் காலத்தில் நாடுமுழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.