ரக்பி உலகக்கிண்ணம் - பிரான்ஸ் இத்தாலி போட்டியின் போது துப்பாக்கிச்சூடு!

7 ஐப்பசி 2023 சனி 15:19 | பார்வைகள் : 8015
ரக்பி உலகக்கிண்ண போட்டிகளில் நேற்று இடம்பெற்ற பிரான்ஸ்-இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியின் போது மார்செய் நகரில் ரசிகர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
மார்செய் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள Cours Estienne d'Orves பகுதியில் திரை ஒன்று அமைக்கப்பட்டு மேற்படி போட்டி காட்சிப்படுத்தப்பட்டது. இரவு 10.30 மணி அளவில் அங்கு திடீரென ரசிகர்கள் மர்ம நபர்களால் கற்கள் வீசப்பட்டது. அதையடுத்து கூட்டத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் கால்களில் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த கூட்டம் கலைக்கப்பட்டு போட்டி திரையிடும் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. ஆயுததாரி தேடப்பட்டு வருகிறார்.
லியோனின் OL மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி ரக்பி உலகக்கிண்ண போட்டில் 60-7 எனும் கணக்கில் பிரான்ஸ் இத்தாலியை வீழ்த்தியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.