இஸ்ரேல் தாக்குதல் : யூதர்கள் வசிக்கும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!
7 ஐப்பசி 2023 சனி 16:16 | பார்வைகள் : 20832
பிரான்சில் உள்ள யூத மத ஸ்தலங்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 200 வரையானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிற. இந்நிலையிலேயே உள்துறை அமைச்சர் இன்று சனிக்கிழமை இதனை அறிவித்துள்ளார். “நாங்கள் ஏற்கனவே மேற்படி இடங்களை பாதுகாப்புக்கு உள்ளாக்கியுள்ளோம். நான் பரிசுக்கு திரும்பியதும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்படும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!” என அவர் தெரிவித்தார்.
தற்போது Toulouse (Haute-Garonne) நகரில் உள்ள உள்துறை அமைச்சர், மேற்படி இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் பரிசில் அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan