Livry-Gargan : பாதசாரியை மோதி தள்ளிய காவல்துறை வீரர்!

7 ஐப்பசி 2023 சனி 17:15 | பார்வைகள் : 16955
காவல்துறை வீரர் ஒருவர் அதிவேகமாக பயணித்து பாதசாரி ஒருவரை மோதி தள்ளியுள்ளார். படுகாயமடைந்த பாதசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. காவல்துறை வீரர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த நிலையில், பாதசாரிகள் கடவையில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளார். இச்சம்பவத்தில் இருவரும் காயமடைந்துள்ளனர். பாதசாரி பலத்த காயமடைந்து Kremlin-Bicêtre மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த காவல்துறை வீரர், பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் பணியாற்றுகிறார். அவர் நேற்று மாலை கடமைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலே மேற்படி சம்பவ இடம்பெற்றதாகவும் சிவப்பு சமிஞையில் நிறுத்தாமல் அதிவேகமாக பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1