Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் யூதர்கள் - கடும் பாதுகாப்பு!

பிரான்சின் யூதர்கள் - கடும் பாதுகாப்பு!

7 ஐப்பசி 2123 வியாழன் 18:57 | பார்வைகள் : 9171


இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸின் கடுமையான தாக்குதலையடுத்து பரான்சில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

யூத வழிபாட்டுத் தலங்கள், யூதப் பாடசாலைகள், யூத கலாச்சார மையங்கள் என அனைத்திற்கும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எமானுவல் மக்ரோனின் வேண்டுகோளையடுத்து உடனடியாகப் பாதுகாப்புக்களை அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அனைத்து யூதத் தலங்களின் பாதுகாப்புகளை உறுதி செய்துள்ளனர்.

பிரான்சில் யூதர்களின் மீது இஸ்லாமியப் பயங்கரவாதகளின் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற காரணத்திற்காக, பரிஸ் மற்றும் அதன் புறநகரப் பகுதிகளிலும் மேலும் பல மாகாணங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்