Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மீது தாக்குதல் - இருளில் மூழ்கிறது ஈஃபிள்!

இஸ்ரேல் மீது தாக்குதல் - இருளில் மூழ்கிறது ஈஃபிள்!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 05:34 | பார்வைகள் : 8824


இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாதிகள் மேற்கொண்டுவரும் தாக்குதலை அடுத்து, கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களுக்கு ஆதரவாக ஈஃபிள் கோபுரம் இன்று தனது விளக்குகளை  அணைத்து இருளில் மூழ்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ குறிப்பிட்டுள்ளார். "ஹமாஸ் (தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பு) தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களுக்காக இன்று இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்கிறது" என ஆன் இதால்கோ தனது X சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டார்.

மேற்படி பயங்கரவாத தாக்குதலில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 1,100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்