Paristamil Navigation Paristamil advert login

அவதானம் இளம் பெண்களே அறிகுறிகள் இல்லாத மார்பகப் புற்றுநோய்..

அவதானம் இளம் பெண்களே அறிகுறிகள் இல்லாத மார்பகப் புற்றுநோய்..

8 ஐப்பசி 2023 ஞாயிறு 06:35 | பார்வைகள் : 5778


இன்றைய நிலையில் புற்றுநோய் நோயாளிகளில் 15% சதவீதம் நோயாளிகள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர் என பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதுவும் கூடுதலான மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் 40% வீதம் 40 வயதுக்கு குறைவான இளம் பெண்கள் என குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவிதமான அறிகுறிகளும் அற்று நோவோ, வலிகளோ இல்லாமல் மார்பகப் புற்றுநோய் இளம் பெண்களைத் தாக்குகிறது. என தெரிவிக்கும் ஆய்வறிக்கை இரு இளம் பெண்களை சாட்சியமாக காட்டுகிறது 

Mélaine 33 வயது இரு குழந்தைகளுக்கு தாய் அவரின் கடைசிக் குழந்தைக்கு 7 மாதங்கள் ஆகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தன் குடும்ப வைத்தியர் மூலம் mammographe, échographie போன்ற மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு 'triple négatif' எனும் மார்பகப் புற்றுநோய் முதல் கட்டத்தில் இருப்பதை அறிந்து கொண்டார் என்றும்.

Vanessa வயது 38 அவருக்கு தலைமுடி திடீரென வழமைக்கு மாறாக அதிகமாக உதிர, மருத்துவரை எதிட்ச்சையாக பார்க்க சென்றார், அவருக்கும் மேற்குறிப்பிட்ட பரிசோதனைகள் செய்தபோது மார்பகப் புற்றுநோய் இரண்டாம் கட்டத்தைத் தாண்டி இருந்தது என்று கூறப்படுகிறது.

மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்கும் போது (chimiothérapie,  l'immunothérapie, chirurgie, radiothérapie) கீமோதெரபி, இம்யூனோதெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மூலம் 80% வீதம் சுகப்படுத்த முடியும் என்கிறார் புற்றுநோயியல் துறையின் தலைவர் Léon Bérard.

"பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் வருடத்தில் ஒருமுறையேனும் mammographe, échographie பரிசோதனைகளை செய்யவேண்டும். மறைந்திருக்கும் மார்பகப் புற்றுநோயை கண்டறிய இந்த நிகழ்ச்சி நிரல் மிக இன்றியமையாத ஒன்று. எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை என இருப்பது ஆபத்தானது எனவும் புற்றுநோயியல் துறையின் தலைவர் Léon Bérard. குறிப்பிடுகிறார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்