இஸ்ரேல் நாட்டின் போர் பிரகடனம்...
8 ஐப்பசி 2023 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 8260
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படைகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஹமாஸ் படைகளின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸ் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை கணித்துள்ளார்.
அவை நிறைவேறியும் உள்ளது. இந்த நிலையில், 2023ல் ஒரு பெரும் போர் மூளும் அபாயம் குறித்து நோஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிட்லர் தொடங்கி, கென்னடி படுகொலை மட்டுமின்றி, 2022ல் விலைவாசி உயர்வால் உலக மக்கள் படும் அவதிகளும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.
தற்போது இஸ்ரேல் போர் பிரகடனம் தொடர்பிலும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
அதாவது, 7 மாதங்கள் நீடிக்கும் பெரும் போர், தீய செயல்களால் மக்கள் இறப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கத்தில் இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் தொடர்பான கணிப்பு என்றே நம்பப்பட்டது.
ஆனால் தற்போது ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அறிவித்துள்ள போர் பிரகடனமும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பை உறுதி செய்வதாக கூறுகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தமது சமூக ஊடக பக்கத்தில் போர் பிரகடனம் குறித்து பதிவு செய்துள்ளார்.
ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது.
யூதர்களின் மத ரீதியான விடுமுறைகளின் கடைசி நாளில் ஹமாஸ் அமைப்பு அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
ஹமாஸ் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படும் இஸ்ரேலின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்திற்காக போராடும் ஹமாஸ் அமைப்பினை இஸ்ரேல் உள்ளிட்ட பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் பல எண்ணிக்கையிலான நாடுகள் தீவிரவாத குழு என்றே அடையாளப்படுத்தி வருகிறது.
ஆனால் 1946ல் வெளியான பாலஸ்தீன வரைப்படமும், தற்போதைய வரைப்படமும் ஒப்பிட்டாலே இஸ்ரேல் முன்வைக்கும் அரசியல் புரியும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.