ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: அடையாளம் காண முடியாமல் குழம்பும் ஆசிரியர்கள்

8 ஐப்பசி 2023 ஞாயிறு 07:35 | பார்வைகள் : 4361
இந்திய மாநிலம், கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் 5 இரட்டையர்கள் படிப்பதால், அடையாளம் காண முடியாமல் ஆசிரியர்கள் குழம்புகின்றனர்.
கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது.
இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர்.
அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர்.
2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கின்றனர்.
இந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரட்டையர்களால், அவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது. இவர்களின், பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், தினமும் போராடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர். தற்போது, இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025