Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் - ஒருவர் கைது!

Val-de-Marne : பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் - ஒருவர் கைது!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 07:47 | பார்வைகள் : 7126


Cachan (Val-de-Marne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  Cachan நகரில் வசிக்கும் 28 வயதுடைய குறித்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவரது மனைவியாவார். அவர் வணிக வளாகம் ஒன்றில் இருந்து தனது வீடு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், அவர் மீதுப்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வயிற்றுப்பகுதி, தொடை போன்ற இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். 

காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு  சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்