ஜாம்பவான் சச்சின் டெண்டுலகரின் உலகக்கோப்பை சாதனையை தகர்த்த வார்னர்
8 ஐப்பசி 2023 ஞாயிறு 10:32 | பார்வைகள் : 2218
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுலகரின் உலகக்கோப்பை சாதனையை டேவிட் வார்னர் தகர்த்தார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.
சென்னையில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை துவங்கியது.
மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி வார்னருடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 2வது பவுண்டரியை விரட்டியபோது புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
அவர் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் 20 இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோரை, வார்னர் 19 இன்னிங்ஸ்களிலேயே எடுத்து தகர்த்துள்ளார்.
அத்துடன் உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில், டேவிட் வார்னர் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (1,743), ஆடம் கில்கிறிஸ்ட் (1,085), மார்க் வாக் (1,004) ஆகியோர் உலகக்கோப்பையில் 1000 ஓட்டங்களை கடந்த அவுஸ்திரேலிய வீரர்கள் ஆவர்.
உலகக்கோப்பையில் அதிவேக 1000 ஓட்டங்கள்:
டேவிட் வார்னர் - 19 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் / ஏபி டி வில்லியர்ஸ் - 20 இன்னிங்ஸ்
விவியன் ரிச்சர்ட்ஸ் / சவுரவ் கங்குலி - 21இன்னிங்ஸ்
மார்க் வாக் - 22 இன்னிங்ஸ்
ஹெர்ஸசெல்லே கிப்ஸ் - 22 இன்னிங்ஸ்