Paristamil Navigation Paristamil advert login

காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்வது சிறந்ததா?

காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்வது சிறந்ததா?

8 ஐப்பசி 2023 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 2554


ஒருவரை நன்கு புரிந்து கொண்டு திருமணம் செய்தால் அது காதல் திருமணம் .

திருமணம் செய்துகொண்டு பிறகு புரிந்து கொண்டால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

நடைமுறையில் இரண்டிலுமே வெற்றி தோல்வி இருக்கிறது .

காதல் திருமணங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் குடும்பமாக இருக்கும் காதலிக்கும் போது இருவர் மட்டுமே இருந்திருப்பார். 

ஆனால் திருமணம் ஆன பிறகு குடும்பத்தினால் கருத்துவேறுபாடுகள் வரலாம் . 

அப்போது அந்த புரிதல் எங்கே செல்கிறது தெரியாது ( போலியான காதல் ) . உண்மை காதலர்கள் அனைத்தையும் கடந்து வருவார்கள் .

இவர்கள் எனக்கு தெரிந்த உண்மை காதலர்கள் ஜாதி மதங்களை கடந்து சிறந்து விளங்குகிறார்கள். ( காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் )

இவர்கள் மற்றொரு சிறந்த காதலர்கள் கணவனும் மனைவியும் செய்கையாலே பேசிக்கொள்வார்கள் . ( காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் )

இருவரும் என் கல்லூரி தோழர்கள் தற்போது கணவன் மனைவியாக .அருமையான காதல் ஜோடி . ( காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் )

காதலித்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மற்றோர் ஜோடி. ( காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் )

இதுனால கூறவருவது என்னவென்றால் காதல் உண்மையென்றால் இருவரும் வெற்றிகொள்வர் இது காதல் திருமணத்திற்கு பொருந்தும் .

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் புரிந்துகொள்ள முயற்சிக்காமலேயே பிரிந்து விடுவார் , அது எப்படி குடும்பம் தானே அந்த மாப்பிள்ளையை பார்த்தார்கள் எப்படி பிரிய வாய்ப்பு வரும் . சரியான ஆளை தானே தேர்ந்தெடுத்தார்கள் எப்படி தோல்வி அடைந்தது.

காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட திருமணமோ!!! திருமணம் ஆகும் ஆணும் பெண்ணும் புரிந்து அன்போடு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இரண்டுமே வெற்றிதான் .

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்