Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பிரிந்து சென்ற கணவரால் மனைவிக்கு நேர்ந்த கதி

இலங்கையில் பிரிந்து சென்ற கணவரால் மனைவிக்கு நேர்ந்த கதி

8 ஐப்பசி 2023 ஞாயிறு 13:54 | பார்வைகள் : 7935


ராஜாங்கனை, பிரதேசத்தில் வசித்து வந்த 53 வயதுடைய பெண் ஒருவர் கொகைல செய்யப்பட்டுள்ளார்.

பிரிந்த கணவன் எனக் கூறப்படும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரேணுகா தீபானி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மார்புப் பகுதியில் இரண்டு கத்திக்குத்து காயங்களும் கை பகுதியில் காயமும் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த பெண் ராஜாங்கனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார்,தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளனர்.


 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்