Paristamil Navigation Paristamil advert login

ஆனந்தக் குளியல்... வீடியோவை வெளியிட்ட அமலாபால்..!

 ஆனந்தக் குளியல்...  வீடியோவை வெளியிட்ட  அமலாபால்..!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 15:42 | பார்வைகள் : 6643


நடிகை அமலா பால் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில் ஆனந்தமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவர் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் குறிப்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் கிளாமர் வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

சமீபத்தில் கோவாவில் பிகினி உடையில் தண்ணீரில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் அருவியில் ஆனந்தமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகிய நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், பெற்றுள்ளது என்பதும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்