பரிஸ் : குடும்பத்தினைக் கட்டி வைத்து கொள்ளை!
8 ஐப்பசி 2023 ஞாயிறு 17:05 | பார்வைகள் : 18182
வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் குடும்பத்தினரைக் கட்டி வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பதியினர் இருவர், அவர்களது மகள் மற்றும் பேத்தி ஆகிய நால்வர் கொண்ட மொத்த குடும்பத்தினரையும் கட்டி வைத்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முக்கியமான பொருட்களை கொள்ளையிட்டனர்.
இதில் குறித்த ஆணை சுத்தியல் ஒன்றினால் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.
காலை 5 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்தினை வந்தடைந்த போது அங்கு நிலமை கைமீறிச்சென்றிருந்தது. கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாக்கப்பட்ட நபர் அதிக இரத்தப்போக்குடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan