Paristamil Navigation Paristamil advert login

"JO Paris 24" மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் (paralympiques) நுழைவுச்சீட்டு விபரங்கள்.

8 ஐப்பசி 2023 ஞாயிறு 17:46 | பார்வைகள் : 3637


நாளை 09/10/2023 காலை 10:00 மணிமுதல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் ( paralympiques) போட்டிகளில் நடக்கவிருக்கும் 259 விளையாட்டு அமர்வுகளை காண்பதற்கான 2.8 மில்லியன் நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை ஆரம்பமாகவுள்ளது. 

 இதில் ஐந்து லட்சம் சீட்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளும் வழங்கப்படவுள்ளன. ஒரு நுழைவுச்சீட்டின் விலை 15€ யூரோக்கள் என அறியப்படுகிறது. எனைய சீட்டுகளில் 80% சதவீத 50€ யூரோவுக்கும் அல்லது அதற்கு குறைவான விலையில் விற்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பெரியவர்களுடன் செல்லும் 12 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு 10€ யூரோக்கள் மட்டுமே அறவிடப்படும் என மேலும் தெரியவருகிறது.

'paralympiques' மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழா Place de la Concorde பகுதியில் நடக்கவுள்ளது அந்த நிகழ்ச்சியினை பார்பதற்கு நுழைவு சீட்டுகள் 150€ முதல் 700€ யூரோக்கள் வரை இருக்கும் எனவும், நிறைவு நாள் நிகழ்ச்சியைப் பார்பதற்கான நுழைவு சீட்டுகள் 25€ முதல் 100€ யூரோக்கள் வரை இருக்கும் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

'paralympiques' மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 2024ம் ஆண்டு  28 ஓகஸ்ட் முதல் 08 செப்டம்பர் வரை பிரான்சில் நடைபெறவுள்ள.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்