Paristamil Navigation Paristamil advert login

ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை: கல்வி அமைச்சர்

 ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை: கல்வி அமைச்சர்

9 ஐப்பசி 2023 திங்கள் 11:32 | பார்வைகள் : 2377


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டில் இருமுறை பொதுத் தேர்வு என்ற நடைமுறை கட்டாயமில்லை. சுயவிருப்பத்தில் மாணவர்கள் இதை தேர்வு செய்து கொள்ளலாம், என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தற்போது ஆண்டுக்கு ஒருமுறை பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

அதிக மதிப்பெண் இதை ஆண்டுக்கு இருமுறையாக நடத்தவும், அதில் கிடைக்கும் அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், தேசிய பாடதிட்ட வரைமுறை குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையிலேயே, ஆண்டில் இரண்டு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு தரும் முறை, அடுத்தாண்டில் இருந்து அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அது மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஆண்டுக்கு ஒருமுறை தேர்வின்போது, இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ, வாய்ப்பை இழந்து விட்டோமோ, தேர்ச்சி பெறுவோமோ என்ற பயம், அச்சம், பதற்றம் உள்ளிட்டவை, இந்த புதிய முறையால் தவிர்க்கலாம். இந்த முறைக்கு மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த முறை கட்டாயமில்லை.

மாணவர்கள் தங்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில், தேர்வை தேர்ந்தெடுக்கலாம். ராஜஸ்தானின் கோட்டாவில், நுழைவுத் தேர்வு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

இந்த விவகாரத்தில், மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுவதை தடுக்க அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். தங்களது சொந்த ஊரில், பள்ளியில் பதிவு செய்துவிட்டு, கோட்டாவுக்கு சென்று மாணவர்கள் படிப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இதுபோன்ற, 'டம்மி ஸ்கூல்' முறை மிக முக்கியமான பிரச்னையாகும்.

இதனால், பள்ளிக் கல்வி அனுபவத்தை மாணவர்கள் இழக்க நேரிடும். இது குறித்து நிபுணர்களுடன் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கை மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த முடியாது என, சில மாநிலங்கள் கூறி வருகின்றன.

கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், தங்களுடைய புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளன. அதில், 99 சதவீதம், தேசிய கல்விக் கொள்கையில் உள்ளவையே. அவர்களின் நோக்கம், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என்பதல்ல. முழுக்க முழுக்க அரசியல் நோக்கமே. இவ்வாறு அவர் கூறினார

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்