ஈஃபிள் கோபுரம், நகரசபைக் கட்டிடங்கள் இருளில் மூழ்கின! - பரிசில் பேரணி!
9 ஐப்பசி 2023 திங்கள் 06:00 | பார்வைகள் : 13343
இஸ்ரேல் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைந்து மெளனித்தது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரசபைக் கட்டிடங்களும் மின் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கியது. மார்செயில் உள்ள Palais du Pharo கட்டிடமும் இருளில் மூழ்கியது.
அதேவேளை, நேற்று மாலை பரிசின் Place Victor Hugo பகுதியில் இருந்து மாலை 6.30 மணி அளவில் அமைதி பேரணி ஒன்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இடம்பெற்றது. இந்த பேரணி இரவு 8 மணி அளவில் Trocadéro பகுதியில் சென்று நிறைவடைந்ததாக அறிய முடிகிறது.
மேலும், இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தில் இஸ்ரேலின் தேசியக்கொடி ஒளிரவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பிரான்ஸ் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளமை அறிந்ததே. இதுவரையான தாக்குகளில் இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள், நேபாளத்தினர், ஒரு பிரெஞ்சுப் பெண் உள்ளிட்ட 700 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan