இஸ்ரேல் தாக்குதல் - பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பேரணிக்கு தடை!
9 ஐப்பசி 2023 திங்கள் 07:20 | பார்வைகள் : 32353
இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த பேரணி ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த இந்த பேரணி லியோன் (Lyon) நகரில் இடம்பெற இருந்த நிலையில் Rhône காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். அங்கு வசிக்கும் பாலஸ்தீன மக்கள் சிலர் இணைந்து இந்த பேரணியை பால்ஸ்தீனத்துக்கு ஆதரவாக மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பிரான்ஸ் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளமை அறிந்ததே. நேற்று இரவு வரையான தகவல்களின் படி இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 2,150 பேர் காயமடைந்ததாகவும், 150 பேர் வரை பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.