Paristamil Navigation Paristamil advert login

சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன்: உதயநிதி

சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன்: உதயநிதி

9 ஐப்பசி 2023 திங்கள் 15:49 | பார்வைகள் : 9246


சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவேன்; முதலில் சிஏஜி அறிக்கை பற்றி பேசுவோம். அதனை திசை திருப்பாதீர்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக.,வுக்கு பா.ஜ.,வும் அதிமுக.,வும் ஒன்று தான். எங்களுக்கு யார் போட்டி என்பதில் அந்த இரு கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன. கவர்னர் தேவையில்லாத அரசியல் எல்லாம் பேசி வருகிறார். அதனையெல்லாம் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஆசிரியர்கள் போராட்டத்தை ஏறக்குறைய வாபஸ் பெற்றுவிட்டனர். நிதி நிலைமையை பொறுத்து எங்கள் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

வருமான வரித்துறை சோதனை என்பது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாம் வருவதுதானே. அவர்கள் தினமும் வீட்டிற்கு வரும் விருந்தாளி போல ஆகிவிட்டனர்.

சனாதனம் குறித்து பேசியதை பா.ஜ.,வினர் திசை திருப்புகின்றனர். நாங்கள் சிஏஜி அறிக்கை, மணிப்பூர் விவகாரம் பற்றி பேசி வருகிறோம். சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவேன். சனாதனம் பற்றி ஈ.வெ.ரா., அம்பேத்கர், கருணாநிதி, அண்ணாதுரையை விட நான் ஒன்றும் அதிகமாக பேசவில்லை. முதலில் சிஏஜி அறிக்கை பற்றி பேசுவோம். அதன்பிறகு தேர்தலுக்கு அப்புறம் சனாதனம் பேச்சிற்கு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்

வர்த்தக‌ விளம்பரங்கள்