Paristamil Navigation Paristamil advert login

கிராபிக்ஸ் காட்சிகளால் அசத்தும் 'அயலான்' டிரைலர்..!

கிராபிக்ஸ் காட்சிகளால் அசத்தும் 'அயலான்' டிரைலர்..!

6 ஐப்பசி 2023 வெள்ளி 15:29 | பார்வைகள் : 1903


சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ‘அயலான்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் ஆரம்பத்திலேயே ’ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எனர்ஜி இந்த உலகத்தை டாமினேட் செய்கிறது’ என்ற வசனத்துடன் ஆரம்பம் ஆவதால் ட்ரெய்லருக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு விஞ்ஞானிகளின் வித்தியாசமான கண்டுபிடிப்பு நடந்து வரும் நிலையில் திடீரென பருவ நிலை மாற்றத்தால் பூமிக்கு அழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் வேற்று கிரகத்திலிருந்து அயலான் பூமிக்கு வருகிறார். அவர் சிவகார்த்திகேயன் மற்றும் கருணாகரன், யோகி பாபு குழுவினரிடம் இருந்து பூமிக்கு வந்த ஆபத்தை தடுப்பதற்கு என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக படக்குழுவினர் பெருமளவு மெனக்கிட்டு இருக்கின்றனர் என்பது டிரைலரை பார்க்கும் போது தெரிய வருகிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் அயலான் காமெடியில் கலக்கி இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை, ரவிக்குமாரின் திரைக்கதை வசனம், அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகள், சிவகார்த்திகேயன் யோகி பாபு குழுவினரின் காமெடி நடிப்பு என மொத்த அம்சங்கள் பாசிட்டிவாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் பொங்கல் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், கருணாகரன், யோகிபாபு, இஷா கோபிகர், பானுப்ரியா, பால சரவணன், கோதண்டம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.