புதிய தடுப்பூசி பிரான்சுக்கு வருகிறது, நீண்டகால நோய்க்கு நிவாரணம்.
6 ஐப்பசி 2023 வெள்ளி 18:05 | பார்வைகள் : 6651
சின்னம்மை நோயை ஒத்த 'virus de la varicelle' எனும் நோய்தொற்று வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் அற்றவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஏற்படுகிறது. சிறிய சிவப்பு நிற பருக்கள் உடலில் தோன்றும் இந்த நோய் உடலில் மிகுந்த வலியை ஏற்படுத்துவதோடு, உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது.
இந்த நோய்த்தொற்றுக்கு நிவாரண மருந்துகள் இருந்தாலும், அவை நூறு வீதம் நிவாரணம் அளிப்பதில்லை, அனால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது. இந்த நிலையில் 'virus de la varicelle' தொற்றுக்கு எதிரான ஒரு தடுப்பூசி விரைவில் பிரான்சுக்கு அறிமுகமாக இருப்பதாக பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த தடுப்பூசி பெல்ஜியம், ஜெர்மன் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது எனவும். தரமான நிவாரணத்தை வழங்கிகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.