Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அறிமுகம்

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அறிமுகம்

7 ஐப்பசி 2023 சனி 09:54 | பார்வைகள் : 8345


 கனடாவில் வேலை வாய்ப்பு தொடர்பில்  புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல்  ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.5 வீதம் என்ற அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இந்த நிலைமை பேணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்வித்துறையில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பகுதிநேர வேலை வாய்ப்புகளே அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சனத்தொகை அதிகரிப்பு வலுவான நிலையில் காணப்படுவதனால் மாதாந்தம் தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்