Paristamil Navigation Paristamil advert login

லியோ படத்தில் கமல், சூர்யா இருக்கிறார்களா.?

லியோ படத்தில் கமல், சூர்யா   இருக்கிறார்களா.?

7 ஐப்பசி 2023 சனி 14:29 | பார்வைகள் : 7332


லியோ படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. மேலும் ஆரம்பம் முதலே லியோ படத்திற்கு எதிர்ப்புகள் நிறைய வந்தாலும் ஒரு வருடத்திற்குள் லோகேஷ் படத்தை எடுத்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டார். அதுவும் லியோ படம் 2 மணி நேரம் 43 வினாடிகள் கொண்டுள்ளது.

அதை மினி படமாக லியோ ட்ரைலரை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் லோகேஷ். மேலும் லியோ படத்தின் பூஜை போடப்பட்டதில் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது லியோ படம் எல்சியுவில் இடம்பெருமா என்ற கேள்விதான் அது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது இதில் lcu-க்கு வாய்ப்பு இல்லை என்பது போல தான் தெரிந்தது.

ஆனால் இன்று லோகேஷ் ரசிகர்களுக்கு முன்னால் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லியோ டப்பிங் நடந்தபோது கமல் அங்கு இருந்தார், ஆகையால் இந்த படத்தில் இடம்பெறுகிறாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு ஆண்டவர் எல்லா இடத்திலேயுமே இருக்கிறார்.

அதாவது எங்க டப்பிங் நடந்தாலும் கமல் தனது படங்களுக்காக அங்கு வந்து விடுகிறார். லியோ படம் சென்சருக்கு எடுத்துச் செல்லும் போதும் அங்கு வேறு ஒரு விஷயத்திற்காக கமல் வந்திருந்தார். ஆகையால் அதை இதோடு ஒப்பிட முடியாது என்று லோகேஷ் கூறியிருந்தார். ஆனாலும் தொகுப்பாளினி கமல் இந்த படத்தில் இடம்பெறுகிறாரா என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.

இன்னும் பத்து நாளில் உங்களுக்கே தெரிந்து விடும் என மலுப்பலாக லோகேஷ் பதிலளித்திருந்தார். இதன் மூலம் கண்டிப்பாக லியோ படத்தில் கமல் இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது. அதேபோல் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மற்றும் சாண்டி புகைப்படத்தை ஒன்றாக இணைத்து ஒரு கமெண்ட் வந்திருந்தது.

அதில் வலுவான கதாபாத்திரம் சேண்டி மாஸ்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை லோகேஷ் கூறியிருக்கிறார். அதேபோல் சூர்யாவும் லியோ படத்தில் இடம்பெறுகிறார் என்பதை லோகேஷ் பட்டும் படாமல் கூறி இருக்கிறார். ஆகையால் கண்டிப்பாக லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சலில் இடம்பெறுகிறது என்பது இதன் மூலம் 100% உறுதியாகிவிட்டது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்