இலங்கையில் 300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!

12 ஆடி 2023 புதன் 15:35 | பார்வைகள் : 8291
இலங்கையில் மேலும் 300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.