Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பில் வரும் பலவித மோசடிகள்: பாதுகாத்துக்கொள்வது எப்படி?

வாட்ஸ்அப்பில் வரும் பலவித மோசடிகள்: பாதுகாத்துக்கொள்வது எப்படி?

10 ஐப்பசி 2023 செவ்வாய் 07:46 | பார்வைகள் : 2226


தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப்பில் ஏற்படும் பலவித மோசடிகள் பற்றியும், எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

நல்ல லாபகரமான வேலை வாங்கிக் தருகிறோம் என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்பவர்களை பார்த்து யாரையும் ஏமாற வேண்டாம். இது, மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தும் ஒரு பொதுவான மோசடி வழியாகும்.

முதலில், இந்த லாபகரமான வேலைக்கு சிறிய தொகை அளிக்க வேண்டும் என்று கூறி கேட்பார்கள். பின்பு, பணத்தை வாங்கிவிட்டு உங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக கணிசமான தொகையை வழங்குவார்கள். இதன்பின்னர், அதிக தொகையை முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றுவார்கள்.

உங்களது பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றுவது மட்டுமல்லாமல், உங்களது சில தகவல்களும் அவர்களுக்கு சென்றுவிடும்.

இ-மெயில் ஐடி-க்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை திருட பயன்படுத்தப்படும் ஒரு மோசடி தான் இது. 5 நபர்களுடன் மற்றும் அவர்களின் இ-மெயில் ஐடிக்களுடன் மெசேஜை ஷேர் செய்தால் உங்களுக்கு ஐபோன் பரிசு வழங்கப்படும் என்று கூறுவார்கள். அதை நம்பி ஏமாற வேண்டாம்.

குறிப்பாக, பரிசுகள் வழங்குவோம் என்று கூறி தனிப்பட்ட விவரங்களை கேட்கும் லிங்குகளை நம்ப வேண்டாம்.

சில மோசடி செய்பவர்கள் இதையெல்லாம் தாண்டி அட்வான்ஸாக யோசிக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த ஆப்ஸ் டவுன்லோட் மோசடி.

பேங்க் ஆப்ஸ்களின் APK ஃபைல்ஸ்களை மோசடி நபர்கள் தங்களால் தயார் செய்யபட்ட malicious code -ஆல் மாற்றியமைத்த லிங்குகளை வாட்ஸ் அப் மெசேஜ் மூலமாக அனுப்புவார்கள். இதனால், அவர்கள் பேங்க் ஏஜெண்டுகளாக மாறி நம்ப வைப்பார்கள்.

போலியான ஃபிஷிங் வெப்சைட்ஸ்கள் மூலம் தொடர்புகொண்டு, சப்போர்ட்டிற்காக app-ன் லிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்புவார்கள். இதனை நம்பி ஏமாறும் சிலர் ஆப்பை இன்ஸ்டால் செய்து வங்கியின் விவரங்களை என்டர் செய்வார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்.

தற்போது, வாட்ஸ் அப்பில் சர்வதேச எண்களில் இருந்து கால்கள் வருகின்றன. உங்களுக்கும் இதை போல கால்கள் வந்தால் அதனை எடுக்க வேண்டாம்.

இத்தகைய நம்பரை ரிப்போர்ட் செய்து பிளாக் செய்து விடுங்கள். இத்தகைய பிரச்சனைக்கு வாட்ஸ் அப் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரைமினல்கள் வாட்ஸ்அப் மூலம் லிங்க்ஸ்களை அனுப்புவார்கள். இந்த லிங்கை க்ளிக் செய்தால், ஒரு ஃபிஷிங் வெப்சைட்டிற்கு நம்மை அழைத்து செல்லும். இது நம்முடைய தகவல்கள் மற்றும் சேமிப்புகளை மோசடி நபர்களின் கைகளில் சிக்க கூடும்.

எனவே, வாட்ஸ் அப்பில் வரும் லிங்கை க்ளிக் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்ஸ்அப் மோசடிகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க two-factor authentication போன்ற பாதுகாப்பு அம்சங்களை எனேபிள் செய்ய வேண்டும். மேலும், உங்களுக்கு தெரியாத நபர்களுக்கு உங்களது தனிப்பட்ட தகவலை பகிர வேண்டாம். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்