Paristamil Navigation Paristamil advert login

ஜோன்-லுக்- மெலோன்சன் - பிரெஞ்சுக் குடியரசின் எதிரி!!

ஜோன்-லுக்- மெலோன்சன் - பிரெஞ்சுக் குடியரசின் எதிரி!!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 6189


இடதுசாரிக் கட்சியான   La France insoumis  கட்சியின் தலைவர் ஜோன்-லுக்- மெலோன்சன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

நேற்று யூத நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை மையமான CRIF, இஸ்ரேலின் மீதான ஹமாசின் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து பரிசில் ஒரு பேரணியை நடாத்தினர்.

இதனை மிகவும் கடுமையாக ஜோன்-லுக்- மெலோன்சன் விமர்சித்துள்ளார்.

«எல்லோரையும் தீவிர வலதுசாரி இஸ்ரேல் அரசுடன் இணைந்து செய்றபட பிரெஞ்சு அரசாங்கம் நினைக்கின்றது. CRIF இன் பேரணியை அங்கீகரித்ததுடன், சோலிசக் கட்சிகளை இணத்துக் கொள்ளாமல் அவமதித்துள்ளது. CRIF, பிரெஞ்சு மக்களின அமைதி எண்ணத்தை, போர்நிறுத்த அவாவை ஒதுக்கி வைத்தவிட்டு, தன்னிச்சையாக செய்றபடுகின்றது. பிரெஞ்சு மக்களை இணைக்காமல், இரண்டு பக்க சாவுகளையும் பார்க்க மறுக்கின்றது»

எனக் காட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் நேற்று யூத நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை மையத்தின் தலைவர் யோனாதன் ஆர்பி இதற்குப் பதிலளித்துள்ளார்.

«ஜோன்-லுக்- மெலோன்சனின் வழமையான போக்கு இது. அவர் எங்களை வெறித்தனமாகத் தாக்குகின்றார். நாம் அனைத்து பிரெஞ்சு மக்களையும் அழைத்திருந்தோம். எங்களுடன்  பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்துப் பேசும் ஜோன்-லுக்- மெலோன்சன், பிரெஞ்சுக் குடியரசின் எதிரியாகவே உள்ளார்»

என யோனாதன் ஆர்பி தெரிவித்துள்ளார்.

ஜான்-லுக்- மெலோன்சனின் மோசமான கருத்து பெரும் விமர்சனங்களைப் பல உயர் மட்டங்களில் எழுப்பி உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்