இஸ்ரேலில் பலியான பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு .
10 ஐப்பசி 2023 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 16408
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது பலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான மக்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்து உள்ளது.
இவர்களில் பல நாட்டவர்கள் அடங்குவர், அவர்களில் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் நான்கு பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில் பதின்மூன்று பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் காணாமல் போயுள்ளனர் எனவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்று நான்கு நாட்கள் கடந்தும் கிடைக்காத நிலையில் தாங்கள் அவர்கள் பற்றி அஞ்சுவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan